ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,769-க்கு விலை போனது.

Update: 2023-06-17 20:40 GMT

பாபநாசம்:

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6,769-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனனக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 376 விவசாயிகள் ஏலத்திற்கு பருத்தியை கொண்டு வந்தனர். இந்த பருத்தியை ஏலம் எடுக்க உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வணிகர்கள், ஆந்திர மாநில வணிகர்கள் மொத்தம் 10 பேர் கலந்து கொண்டனர். விற்பனைக்குழு செயலாளர் சரசு, விவசாயிகளிடம் பருத்தியை நன்கு உலர வைத்து ஈரப்பதம் இன்றி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

ரூ.44 லட்சத்துக்கு கொள்முதல்

இந்த ஏலத்தில் ரூ.44 லட்சம் மதிப்பிலான 65 டன் பருத்தி வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,769-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,329-க்கும், சராசரியாக ரூ.6,189-க்கும் விலை போனது.

விற்பனனக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி, விளம்பரம் மற்றும் பிரசார சித்தார்த்தன், அன்பரசு உள்பட அலுவலர்கள் மறைமுக ஏலம் தொடர்பான பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்