பாபநாசத்தில் பருத்தி ஏலம்

பாபநாசத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,199-க்கு விலை போனது.

Update: 2023-09-22 20:28 GMT

பாபநாசம்;

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர்.தாட்சாயினி தலைமை தாங்கினார். பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 407 லாட் பருத்தி கொண்டுவரப்பட்டது. சராசரியாக 469.8 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,199-க்கும் குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,699-க்கும் பருத்தி ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்