தேவூர்:-
கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. நெடுங்குளம், கல்வடங்கம், குள்ளம்பட்டி, செட்டிபட்டி ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர், செங்கானூர், கொட்டாயூர், பொன்னம் பாளையம், பூதப்பாடி, அம்மாபேட்டை, காவேரிபட்டி, தேவூர், கோனேரிப்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 900 பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று (100 கிலோ) குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 679 முதல் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 599 வரை ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் ரூ.21 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது..