வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

செம்பனார்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2022-08-19 17:52 GMT

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 16-ந்தேதி பருத்தி ஏலம் நடைபெற இருந்தது. அப்போது அங்கு வந்த விவசாயிகள், ஏற்கனவே விற்பனை செய்த பருத்திக்கான தொகை ரூ.62 லட்சத்தை தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என்று கூறி ஏலத்திற்கு வந்த வியாபாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏற்பாடு ஏற்பட்டதால் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு பருத்தி குவிண்டால் ரூ.12,ஆயிரத்து 450-க்கும், குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.11,ஆயிரத்து 550-க்கும், சராசரியாக ரூ.11ஆயிரத்து 868-க்கும் விலைபோனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாநில வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் நடராஜன், வேளாண்மை துணை இயக்குனர் உமாதேவி ஆகியோரின் நடவடிக்கையின் பேரில் விடுபட்ட அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்