அரூர்:
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 235 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 899 முதல் ரூ.9 ஆயிரத்து 300 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது.