பருத்தி ஏலம்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது

Update: 2022-07-25 16:54 GMT

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில், சுமார் 2 ஆயிரம் குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரத்து 111-க்கும், குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 200 க்கும், சராசரியாக ரூ.10 ஆயிரத்து 450-க்கும் ஏலம் கேட்கப்பட்டிந்தது. இ்ந்த மறைமுக ஏலத்தில் மொத்தம் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி பஞ்சு ஏலம் போனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





Tags:    

மேலும் செய்திகள்