கோனேரிப்பட்டி பகுதியில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
கோனேரிப்பட்டி பகுதியில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.;
தேவூர்:
கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள பருத்தி விற்பனை சேவை மையத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் நெடுங்குளம் கல்வடங்கம், கொட்டாயூர், நல்லங்கியூர், பாலிருச்சம்பாளையம், பொன்னம்பாளையம், பூமணியூர் பூதப்பாடி, அம்மாபேட்டை, காவேரிப்பட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிப்பட்டி பகுதி விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்றனர். இதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 1,100 பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 299 முதல் அதிகபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 999 வரை ஏலம் போனது. மொத்தம் 1,100 பருத்தி மூட்டைகள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம் போனது.