அரூர் கச்சேரி மேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் 150 மூட்டை பருத்தியை எடுத்து வந்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.6,729 முதல் ரூ.7,566 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.