ராசிபுரத்தில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

Update: 2023-03-27 18:45 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 55 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 889-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 657-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 116-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 99-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 950 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 381-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

மேலும் செய்திகள்