அரூரில் ரூ.49 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Update: 2023-01-09 18:45 GMT

அரூர்:

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 480 விவசாயிகள் கலந்து கொண்டு, தாங்கள் விளைவித்த 1,505 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 719 முதல் ரூ.8 ஆயிரத்து 666 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.49 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானதாக சங்க செயலாளர் அறிவழகன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்