ரூ.7½ லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7½ லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.;
அரூர்:
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வருகிறார்கள். இந்த ஏலத்திற்கு விவசாயிகள் 500 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை கோவை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இந்த வாரம் ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டால் ரூ.5,150 முதல் ரூ.8,409 வரை ஏலம் போனது. இந்த ஏலத்தில் ரூ.7½ லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.