குடிசை தீயில் எரிந்து சேதம்
நாமக்கல் அருகே திடீரென குடிசை தீயில் எரிந்து சேதம் ஆனது.
நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம் தட்டான்குட்டை பகுதியில் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமான குடிசையில் நடராஜன் - காளியம்மாள் தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டில் இருந்த சாமான்கள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.