குடிசை வீட்டில் தீ விபத்து

நெல்லை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-01-01 00:51 IST

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் கருங்குளத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இதன் அருகே பீடி கம்பெனி காவலாளி குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று பிற்பகல் இந்த வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதை கண்ட சோதனை சாவடி போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி முழுமையாக தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்