அதிக வழக்குகளுக்கு தீர்வு காண அறிவுரை

Update: 2022-06-16 16:55 GMT

திருப்பூர்

தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 26-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து முடிக்க அதிகப்படியான முன்அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் தாலுகா கோர்ட்டு சார்பு நீதிபதிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்