சென்னையில் 23 நீர் நிலைகளில் ஆகாய தாமரைகள் அகற்றட்டதாக மாநகராட்சி தகவல்

சென்னையில் 4.775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2022-09-18 08:56 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் வழிக்கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளில் 23 நீர் நிலைகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களில் பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளின் மூலம் 4.775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த நீர் வரத்துக் கால்வாய்கள் செல்லும் முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில் குறுக்குப் பாலங்கள் உள்ளன. குறிப்பாக மாம்பலம் கால்வாய் செல்லும் தியாகராயநகர், ஜி.என்.ரெட்டி சாலை, விஜயராகவா சாலை, சர்பிட்டி தியாகராயர் சாலை, வெங்கட் நாராயணா சாலை, மூப்பாரப்பன் தெரு, சி.ஐ.டி. நகர் 4-வது பிரதான சாலை, தெற்கு உஸ்மான் சாலை, சி.ஐ.டி. நகர் வடக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள குறுக்குப் பாலங்களின் கீழ்ப் பகுதிகளில் நவீன எந்திரங்களை கொண்டு வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டு உள்ளன. வண்டல்கள் அகற்றப்பட்ட நீர் நிலைகளும், கழிவுகளின் அளவும் வருமாறு:-

அடையாறு-250, மெட்ரிக் டன், வடக்கு பக்கிங்காம் கால்வாய்-790 மெட்ரிக் டன், கேப்டன் காட்டன் கால்வாய்-120 மெட்ரிக் டன், இணைப்பு கால்வாய்-75 மெட்ரிக் டன், கூவம் ஆறு-105 மெட்ரிக் டன், பள்ளிக்கரணை சதுப்பு நிலம்-430 மெட்ரிக் டன், ஆதம்பாக்கம் ஏரி-130 மெட்ரிக் டன், எண்ணூர் குளம்-80 மெட்ரிக் டன், கூவம் ஆறு எம்.எம்.சி. எதிரில்-120 மெட்ரிக் டன், அரிதாஸ் தாமரைக்குளம்-55 மெட்ரிக் டன், தரமணி ஏரி-350 மெட்ரிக் டன், தட்டான்குப்பம் கால்வாய்-40 மெட்ரிக் டன், பெரியதோப்பு ஏரி-45 மெட்ரிக் டன், கொடுங்கையூர் இணைப்பு கால்வாய்-40 மெட்ரிக் டன், விருகம்பாக்கம் கால்வாய்-180 மெட்ரிக் டன், வடக்கு அவென்யூ கால்வாய்-40 மெட்ரிக் டன், பாடிக்குப்பம் கால்வாய்-160 மெட்ரிக் டன், ஓட்டேரி கால்வாய்-130 மெட்ரிக் டன், ஏகாங்கிபுரம் கால்வாய்-140 மெட்ரிக் டன், மாம்பலம் கால்வாய்-750 மெட்ரிக் டன், டிரஸ்ட்புரம் கால்வாய்-150 மெட்ரிக் டன், நந்தம்பாக்கம் கால்வாய்-135 மெட்ரிக் டன் என மொத்தம் 4,775 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றபட்டது.

தூர் வாரும் பணிகளை பருவ மழைக்கு முன்னதாக முடிக்கும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்