சேலம் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் 50-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று புதிதாக 41 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 7 பேர், வீரபாண்டியில் 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.