சேலத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் 90 முஸ்லிம்களுக்கு கொரோனா தடுப்பூசி

சேலத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் 90 முஸ்லிம்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-06-03 21:32 GMT

சேலம்

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் வருகிற 12, 13-ந் தேதி ஹஜ் புனித யாத்திரை பயணம் மேற்கொள்கின்றனர். இதையொட்டி அவர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. துணை இயக்குனர் நளினி தலைமையில் மருத்துவ குழுவினர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சேலம் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மேலும் ஹஜ் புனித யாத்திரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் விவரங்கள், அடையாள அட்டை போன்றவை சரிபார்க்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்