8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிவகாசி பகுதியில் ஒரேநாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-08-21 19:09 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதியில் ஒரேநாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 308 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது.

இதில் 2-வது தவணை தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்பட்டது. மாலை 4 மணி நிலவரப்படி 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். சிவகாசி பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லிங்கபுரம் காலனியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

விழிப்புணர்வு

அப்போது அங்கிருந்த பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம், துணைத்தலைவர் ராஜபாண்டியன், பஞ்சாயத்து செயலர் லட்சுமண பெருமாள் ஆகியோரிடம் பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி அடுத்து வரும் நாட்களில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய வலியுறுத்தினார்.

ஆய்வின் போது சிவகாசி தாசில்தார் லோகநாதன், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் கலுசிவலிங்கம், சீனிவாசன், டாக்டர் வைரக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர் ஷேக்முகம்மது ஆகியோர் இருந்தனர். இதனைதொடர்ந்து கலெக்டர் மேகநாதரெட்டி சிவகாசி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமிற்கு சென்று அங்கு ஆய்வு செய்தார். அப்போது கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்