ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்;

Update:2022-09-12 01:38 IST

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட மொத்தம் 1,597 மையங்களில் நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.

இந்த முகாமில் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த மாதம் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பூஸ்டர் தடுப்பூசியை பலர் ஆர்வமாக செலுத்தி கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்