தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-06-05 09:10 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்பட்டுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் உருமாறிய தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. பி.எ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும், பி.ஏ.5 வகை கொரோனா தொற்று 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். நலமுடன் உள்ளனர். நாவலூர் பகுதியில் பி.ஏ.4 ரக உருமாறிய கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளி, தடுப்பூசி செலுத்தி கொள்வது ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்