கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில்கொரோனா தடுப்பு ஒத்திகை-கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகையை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-10 18:45 GMT

வேகமாக பரவும் கொரோனா

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கொரோனா தொற்று உருமாறிய புதிய வகை வைரஸ் என சுகாதாரத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் (செவ்வாய்க்கிழமை) கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்தது.

கலெக்டர் பார்வையிட்டார்

கிருஷ்ணகிரியில் காந்தி ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆக்சிஜன் இருப்புகளையும், கொரோனா வார்டுகளையும், கொரோனா பரிசோதனை கருவிகளையும் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்ட அவர், கொரோனா வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்தங்கும் மருத்துவ அலுவலர்கள் செல்வி, ராஜா, மாது ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்