கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

Update: 2022-12-27 11:32 GMT

சென்னை,

சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. இந்த வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 1,546 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமித்து வைக்க வசதி உள்ள நிலையில், 80%-ஐ நிரப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்