விருதுநகர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3 பேருக்கு கொரோனா
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடந்த நிலையில் தற்போது முதலாமாண்டு மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
கல்லூரி விடுதியில் 125 மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கண்டறிந்தவுடன் அவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து கல்லூரி விடுதி, வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி விடுதியில் மாணவ- மாணவிகள் தங்கியுள்ள ஒவ்வொரு அறைக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு ஏதுமில்லை. எனினும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.