2½ வயது குழந்தைக்கு கொரோனா

ராமநாதபுரத்தில் 2½ வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2023-04-12 18:43 GMT

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ராமநாதபுரத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2 சிறை கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியை சேர்ந்த 2½ வயது ஆண் குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது. பின்னர் நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் பெற்றோர், குடு்ம்பத்தினருக்கு தொற்று உள்ளதா? என பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்்.

Tags:    

மேலும் செய்திகள்