புதிதாக 70 பேருக்கு கொரோனா

குமரியில் புதிதாக 70 பேருக்கு கொரோனா

Update: 2022-07-05 18:44 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் 991 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 ஆண்கள் மற்றும் 39 பெண்கள் என மொத்தம் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 19 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதே போல் அகஸ்தீஸ்வரம்-6, கிள்ளியூர்-5, குருந்தன்கோடு-1, மேல்புறம்-6, முன்சிறை-15, ராஜாக்கமங்கலம்-2, திருவட்டார்-1, தோவாளை-11, தக்கலை-2 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து வந்த ஒருவரும், சேலத்தில் இருந்து வந்த ஒருவர் என 2 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்