ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 201 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 739 ஆக உயர்ந்தது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 972 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 33 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.