விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;
விருதுநகர்,
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 160 மாணவ,மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனால் கொரோனா பாதித்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியிலும் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.