மதுரையில் புதிதாக 12 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று புதிதாக 12 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று புதிதாக யாரும் உயிர் இழக்கவில்லை.
.