10 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

Update: 2022-07-26 17:47 GMT

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூருக்கு தினமும் வெளி மாநிலங்களில் இருந்து பலர் சிகிச்சைக்கு வருவதால் அவர்கள் மூலமாக தொற்று பரவல் இருந்து வருவதாக தெரிகிறது.

இதை தடுக்க கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இன்று வெளியான பரிசோதனை முடிவில் வேலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் மாநகராட்சியில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்