ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-23 17:10 GMT

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சராசரியாக தினமும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் 22-ந் தேதி ஒரேநாளில் 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்