கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் தினமும் 20-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 23 பேர் பாதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 62 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 61 ஆயிரத்து 663 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 187 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 372 ஆக உள்ளது.