சேலம் மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 56 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 11 பேர், வீரபாண்டியில் 4 பேர், கெங்கவல்லியில் 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர் மற்றும் ஓமலூர், சங்ககிரி, கொளத்தூர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், மேட்டூரில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் தர்மபுரியில் இருந்து வந்த தலா 8 பேர், சென்னையில் இருந்து வந்த 6 பேர், கரூரில் இருந்து வந்த 3 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 2 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.