மதுரையில் புதிதாக 13 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மதுரையில் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அச்சம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஆயிரத்தை கடந்து இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி சுகாதாரத்துறையினரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அதன்படி சிகிச்சையில் இருப்ப வர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
பரிசோதனை
மதுரையில் தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்யப் படுகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் இருந்தும் சளி மாதிரிகள் சேகரிக்கப் படுகிறது. கொரோனாவால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவிக் கின்றனர். மேலும், தகுதி உள்ள நபர்கள் சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா பாதிப்பில் இருந்து உயிரிழப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.