5 பேருக்கு கொரோனா பாதிப்பு
5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து முற்றிலும் நோய்த்தொற்று இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவல் ஏற்பட்டு வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 11-ந் தேதி எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி. பரிசோதனையின் மூலம் 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 3 பேர் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் ஒருவர் இளையான் குடியையும், ஒருவர் கீழச்சிவல்பட்டியையும் சேர்ந்தவர் ஆவார்கள்.