மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல்
மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள மருங்குளம், ஏழுபட்டி, ராவுசாபட்டி, வாகரகோட்டை, கோபால் நகர், மின்னாத்துர், குருங்குலம், தங்கப்ப உடையான் பட்டி, திருக்கானூர் பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டு பகுதி கிராமங்களில் சித்திரைப் பட்டத்தில் கோடை சாகுபடியாக மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர் நன்கு வளர்ந்து உள்ளது. தற்போது 30 நாட்கள் ஆகும் நிலையில் குருத்துப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் மக்காச்சோளம் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைப்படுகின்றனர். மேலும் பூச்சி மருந்துகள் அடித்தாலும் பூச்சி ஒழியாமல் அப்படியே உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மகசூல் குறைந்து விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். குருத்துப் பூச்சியை முழுமையாக ஒழிக்க வேளாண் அதிகாரிகள் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.