ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய போலீசார்

தாம்பரம் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுடன் நவதானிய இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் சேலையூர் சரக போலீசார் புத்தாண்டை கொண்டாடினர்.

Update: 2023-01-02 06:17 GMT

ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை உலகளாவிய சிறுதானிய நாளாக அறிவித்துள்ளது. அதன்படி புத்தாண்டு தினமான நேற்று சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள எஸ்.ஓ.எஸ். ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுடன் நவதானிய இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் சேலையூர் சரக போலீசார் புத்தாண்டை கொண்டாடினர். இதில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு சிறுதானியங்களில் உள்ள நன்மைகள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் எடுத்து கூறினார்.

இதேபோல் தாம்பரம் குட் லைப் ஆதரவற்றோர் இல்லத்தில் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது போலீசார் கேக் வெட்டியும், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்