ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம்
ஆனி சுவாதியைெயாட்டி ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் உள்ள செப்பு தேர் மண்டபத்தில் பெரியாழ்வார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு செப்பு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.