பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் ஆய்வு
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
திருவையாறு;
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தியாகராஜர் ஆராதனை விழா
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 176- வது ஆராதனை விழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி வருகிற 11-ந் தேதி இரவு வரை நடைபெறுகிறது. விழாவை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி ைவக்கிறார். 11-ந் தேதி(புதன்கிழமை) பஞ்சரத்னகீர்த்தனைகள் பாடப்படுகிறது. அன்று நடைபெறும் விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகளை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித், திருவையாறு துணை போலீ்ஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், திருவையாறு தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது விழா பந்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சபா உதவிச்செயலாளர் ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், சபா மேலாளர் சங்கர் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.