உரிமையாளரின் உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனை

அய்யம்பேட்டை அருகே தனியார் பஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனா். இதில் ஒரு வீட்டுக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-11-08 20:09 GMT

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை அருகே தனியார் பஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர்கள் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனா். இதில் ஒரு வீட்டுக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.

தனியார் பஸ் நிறுவனம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் பஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவன உரிமையாளர் கமாலுதீன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டனர்.பணத்தை திரும்ப கொடுக்காத தனியார் பஸ் நிறுவனம் இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உறவினர்கள் வீடுகளில் சோதனை

இந்த நிலையில் கடந்த மாதம் அய்யம்பேட்டை ெரயில்வே ஸ்டேசன் ரோட்டில் உள்ள தனியார் பஸ் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த 19 வாகனங்களை திருச்சி குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.நேற்று அய்யம்பேட்டை கனி நகர், எஸ்.கே.தெரு, வலம்புரி நகர், சக்கராப்பள்ளி வடக்கு தெரு ஆகிய இடங்களில் உள்ள கமாலுதீன் உறவினர்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது

12 இடங்களில்

கோர்ட்டு உத்தரவுப்படியும், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரநீத் ஆலோசனைப்படியும் தனியார் பஸ் உரிமையாளர் கமாலுதீனின் உறவினர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் வீடுகள், கமாலுதீனுக்கு சொந்தமான பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சையில் 6 இடங்களிலும், அய்யம்பேட்டையில் 4 இடங்கள், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், கரூர் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும் என 12 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

ஒரு வீட்டுக்கு 'சீல்' வைப்பு

3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வழக்கு தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டதால் சோதனையில் பெரிதாக ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.இவ்வாறு போலீசார் கூறினர்.அய்யம்பேட்டை கனி நகரில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வீட்டை மட்டும் போலீசார் பூட்டி 'சீல்' வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்