ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்

ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம் திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடந்தது.

Update: 2023-05-29 19:14 GMT

அரியலூர் மாவட்டத்தில் முதலாம் காலாண்டுக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 32 திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுவதுமாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு திருமாவளவன் எம்.பி. அறிவுறுத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) முருகண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்