காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

குத்தாலம் பேரூராட்சியில் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Update: 2023-06-16 18:45 GMT

குத்தாலம்:

மகளிர் திட்ட இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள குத்தாலம் பேரூராட்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேர்வு செய்யப்பட்ட மைய பொறுப்பாளர்கள் மற்றும் சமுதாய அமைப்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. குத்தாலம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கணக்கு மற்றும் நிர்வாக உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், நிதி உள்ளாக்க உதவி திட்ட அலுவலர் செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டு மைய பொறுப்பாளர்களுக்கும், சமுதாய அமைப்பாளர்களுக்கும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்