கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-10 18:45 GMT

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு துணை பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை தரக்குறைவாகவும், கண்ணியமற்ற முறையில் பேசியும், உயர் அதிகாரிகளை இழிவாக பேசிய துணைப் பதிவாளர் உமாதேவியை பணி நீக்கம் செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜா முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமகிருட்டிணன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தாஜூதீன், இணைச் செயலாளர் அழகுராஜா, தேனி கிழக்கு வட்டக்கிளை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் சசிகலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்