குன்னூர் ஒண்டர் லெவன் அணி வெற்றி

பி டிவிஷன் அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் குன்னூர் ஒண்டர் லெவன் அணி வெற்றி பெற்றது.

Update: 2023-07-30 22:00 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி, சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பி டிவிஷன் பிரிவிற்கான அரையிறுதி போட்டியில் குன்னூர் ஒண்டர் லெவன் அணியும், ஊட்டி டிவிஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி டிவிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் எஸ்.மணிகண்டன் 52 ரன்கள், சத்திய மூர்த்தி 42 ரன்கள், ஒ.பி.மணிகண்டன் 35 ரன்கள், அபிஷேக் 28 ரன்கள் எடுத்தனர். ஒண்டர் லெவன் அணியின் பந்து வீச்சாளர் வினோத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 பந்துகளில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குன்னூர் ஒண்டர் லெவன் அணி 34.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணி வீரர்கள் வினோத் 83 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். மற்றொரு வீரர் இஸ்மாயில் 74 ரன்கள் எடுத்தார். டிவிஸ் அணியின் பந்து வீச்சாளர் பிரகாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குன்னூர் ஒண்டர் லெவன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 83 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வினோத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்