11-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து...!

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-09 12:56 GMT

நீலகிரி, 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வரும் 11-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்டம் ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்