குன்னூர் நூலக வளாகத்தில் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு

குன்னூர் நூலக வளாகத்தில் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு

Update: 2023-02-21 18:30 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் உழவர் சந்தை அருகே உள்ள நூலகத்தில் வளாகத்தில் காட்டெருமை ஒன்று நுழைந்தது. அங்கிருந்த வாசகர்கள் அச்சம் அடைந்து கதவை சாத்தினர். சிறிது நேரத்தில் அந்த காட்டெருமை தானாகவே வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. நூலக வளாகத்தில் காட்டெருமை புகுந்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்