விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மயிலாடுதுறை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே உள்ள கங்கணம்புத்தூர் சின்னத்தெருவை சேர்ந்தவர் சபாபதி(வயது55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் அடிக்கடி நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று நெஞ்சு வலியால் துடித்த சபாபதி மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் மயங்கி விழுந்த சபாபதியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சபாபதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.