அன்னவாசல் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அலெக்ஸ் (வயது 24). இவர் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர், மோட்டார் சைக்கிளில் வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அலெக்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.