சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

வாணியம்பாடியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-27 17:51 GMT

வாணியம்பாடியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நியூடவுனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இன்டேன் ஆயில் நிறுவனம் மற்றும் வாணியம்பாடி ஏ.டி.எஸ். கியாஸ் ஏஜென்சி இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமில் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தில் காலை உணவு தயாரிக்கும் பெண் பணியாளர்கள் மற்றும் குடும்ப தலைவிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக இன்டேன் ஆயில் சென்னை மண்டல இணை தலைமை மேளாளர் திலகம், வேலூர் மண்டல விற்பனை மேலாளர் ஜிதேஷ்ஷாஜி ஆகியோர் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் மற்றும் கியாஸ் அடுப்பின் பாதுகாப்பு அம்சங்கள், பாதுகாப்பாக சமையல் எரிவாயு பயன்படுத்தும் முறை, ஆபத்து காலங்களில் செயல்படும் விதங்கள் குறித்து விளக்கி பேசினர்.

தொடர்ந்து வீட்டு உபயோகத்திற்காக புதித 10 மற்றும் 5 கிலோ எடைகளில் பிளாஸ்டிக் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் தனியார் கியாஸ் ஏஜென்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்