சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த2 கடைகளுக்கு அபராதம்
சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது;
தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில், அனைத்து உணவகங்களிலும் தேங்காய் சட்னி, தயிர், மோர் வகைகள், ஷவர்மா உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், அருண்குமார் ஆகியோர், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி, சமைத்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஷவர்மா இறைச்சி வகைகள் 3½ கிலோவை பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு அவைகள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.1,000-ம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறும்போது, 'உணவு பொருட்கள் தொடர்பான ஆய்வு மாவட்ட முழுவதும் தொடரும்' என்றார்.