சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
குலசேகரன்பட்டினத்தில் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
சமையல் தொழிலாளி
குலசேகரன்பட்டினம் கீழ புதுத்தெருவை சேர்ந்தவர் ரபீக் மகன் சேக்சிந்தாமதார் (வயது 39). இவரது மனைவி ஜெரினா. சேக்சிந்தாமதார் சமையல் வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி இவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவும் சேக்சிந்தாமதார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஜெரினா அவரை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சேக்சிந்தாமதார் திடீரென்று வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாராம்.
தூக்கில் தொங்கினார்
பதறிப்போன ஜெரினா கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மின்விசிறியில் சேக்சிந்தாமதார் தூக்கில் தொங்கியுள்ளார். அவர்கள் அவரை தூக்கிலிருந்து மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன் பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.